கொரோனாவின் தாக்கம் குறைந்தது என்று மக்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பி வரும் சூழலில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் 2-வது அலை தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் 2 ஆம் அலை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
அந்தவகையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அரசு அறிவித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளினால் திரைக்கு வரவிருந்த புதிய படங்கள் ரிலீசாவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கொரோனா 2-வது அலை காரணமாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு காரணமாக நடிகை சாய்பல்லவி நடித்துள்ள ‘விராட பருவம்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
அதாவது இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அரசு விதித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளால் தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராணா கதாநயகனாகவும்,சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ள விராட பருவம் தெலுங்கில் தயாராகியுள்ளது.தெலுங்கில் தயாரான இந்த விராட பருவம் படத்தை தமிழிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
பெண் நக்சலைட் காதல் கொள்வது போன்ற கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட்டாகவும்,ராணா காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் கிளைமாக்ஸில் போலீஸ் அதிகாரியாக வரும் ராணாவால் நக்சலைட்டாக நடித்துள்ள கதாநாயகி சாய்பல்லவி சுட்டுக்கொல்லப்படுவது போல் காட்சி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தான் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவியும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி போயிருப்பது நடிகை சாய் பல்லவியை அப்செட் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது