Connect with us

Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள்

பார்வையிலே சொக்க வைக்கும் நடிகை பிரணிதா

Culture

பார்வையிலே சொக்க வைக்கும் நடிகை பிரணிதா

பார்வையிலே சொக்க வைக்கும் நடிகை பிரணிதா

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நடிகை பிரணிதா சுபாஷ் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனையடுத்து அவர் தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஏழை மக்களுக்கு உதவி செய்ய திட்டமிட்ட  பிரணிதா அவர்களுக்காக உணவு சமைத்து வழங்க முடிவு செய்தார். அந்த வகையில் சொந்த செலவில் தினமும் சமையல்காரர்களை கொண்டு பல நூறு ஏழை மக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் திரைத்துறையில் ஆக்டிவாக இருக்க வழக்கம் போல இவரும் சமூக வலைத்தளங்களில் எப்பவும் பிஸியாக இருந்து வருகிறார்.அவ்வப்போது அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

https://www.instagram.com/p/CJ8LrwygkN4/

இந்த படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பார்வையாலே சொக்க வைக்கிறார் என்று கமென்ட் செய்துள்ளனர்.

More in Culture

    To Top