Connect with us

Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள்

விஜய் நடித்த ஷாஜகான் திரைப்பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க?

Entertainment

விஜய் நடித்த ஷாஜகான் திரைப்பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க?

விஜய் நடித்த ஷாஜகான் திரைப்பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க?

 

கடந்த 2001 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படம் இன்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரவி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக ரிச்சா பலோட் அறிமுகமானார். இவர்களுடன் நடிகர் விவேக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

#image_title

இந்த திரைப்படத்தில் நடித்த ரிச்சா பலோட் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார்.இதன் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.

#image_title

பின்னர் 2000 ஆம் ஆண்டு வெளியான நுவ்வே கவாளி என்ற தொலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானர். அதன் பிறகு ரிச்சா பலோட் தமிழில் வெளியான சாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

#image_title

இதன் பிறகு தமிழில் இவர் அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன் மற்றும் உனக்கும் எனக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் தோழியாக இவர் நடித்திருப்பார்.

#image_title

இவர் தெலுங்கில் நடித்த நுவ்வே கவாளி திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

#image_title

இந்நிலையில் அவர் ஹிமான்ஷு பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2013 இல் மகன் பிறந்தார். அதன் பிறகு நடிப்பில் சிறிது ஒய்வு எடுத்து கொண்டார். அதன் பின்னர் தமிழில் யாகவராயினும் நா காக்க என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.

#image_title

ஓடிடி தளமான சோனி லிவ் தளத்தில் சமீபத்தில் வெளியான யுவர் ஹானர் என்ற ஹிந்தி வெப் சிரிஸில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#image_title

மேலும் இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

More in Entertainment

To Top