Connect with us

Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் காட்சி லீக் ஆனது! அதிர்ச்சியில் படக்குழு

Tamil Cinema News

மாஸ்டர் படத்தின் காட்சி லீக் ஆனது! அதிர்ச்சியில் படக்குழு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த பல மாதங்களாக பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் சில குறைந்த பட்ஜெட் படங்கள் OTT மூலமாக வெளியிடப்பட்டது.

இதனையடுத்து நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் சமீபத்தில் திரையரங்குகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இன்னும் சில தினங்களில் திரையரங்கிற்கு வரவுள்ள இந்த திரைப்படத்திற்காக தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சி லீக் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது.

திரைக்கு வருவதற்கு முன்பே படத்தின் காட்சி வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கும்,ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in Tamil Cinema News

To Top