Entertainment
சியான் 61 இல் கதாநாயகி யார்? வெளியானது அப்டேட்
சியான் 61 இல் கதாநாயகி யார்? வெளியானது அப்டேட்
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ளார்.தற்போதைய நிலையில் அவருடைய நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இதையடுத்து விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் நடிகர் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த படத்திற்கு சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜையானது சமீபத்தில்நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து தற்போது சியான் 61 இல் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கிளாமர் அல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.