Connect with us

Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள்

பிட்டு துணியுடன் பளிங்கு உடம்பை காட்டும் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna

Tamil Cinema News

பிட்டு துணியுடன் பளிங்கு உடம்பை காட்டும் ராஷ்மிகா மந்தனா

பிட்டு துணியுடன் பளிங்கு உடம்பை காட்டும் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna

தமிழ் மற்றும் தெலுங்கில் ஹிட்டடித்த புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) பிரபல நடிகையாக மாறியுள்ளார்.

அடிப்படையில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அறிமுகமானது இந்த படமாக இருந்தாலும் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது தெலுங்கு சினிமா தான். குறிப்பாக தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இவரது நடிப்பு வேறலெவலில் ரீச் ஆனது.

Rashmika Mandanna

Rashmika Mandanna

இதில் கிடைத்த பெயர் மூலமாக அவருக்கு அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சரிலேரு நீகேவாரு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அவர் நடித்து அசத்தினார்.இந்த படத்தில் கிடைத்த வெற்றி மூலமாக அவர் பிரபல தென்னிந்திய நடிகையாக பிரபலமாகியுள்ளார்.

Rashmika Mandanna

Rashmika Mandanna

அந்த வகையில் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கிய ராஷ்மிகா, கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

அதன்படி மிஷன் மஜ்னு என்கிற படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்தார். அப்படம் ரிலீசாகும் முன்பே ராஷ்மிகா மந்தனா அமிதாப் பச்சனுடன் இணைந்து  நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து குட் பாய் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளனர்.

Rashmika Mandanna

Rashmika Mandanna

இதுதவிர அவர் தற்போது தமிழில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

https://www.instagram.com/p/CgEzLpSpmth/?igshid=YmMyMTA2M2Y=

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More in Tamil Cinema News

To Top